நடிகர் விஷ்ணு விஷால் நல்ல நேர்த்தியான நடிகர் எனப்பெயர் பெற்றவர். சமீபத்தில் அவரைப்பற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்தன. இந்நிலையில் அவர் பல்வேறு விசயங்களை மீடியாக்கள் மத்தியில் பேசினார்..அவர் குறிப்பிட்ட சில விசயங்கள்.”நான் எனது சம்பளத்தைக் குறைத்துள்ளேன். அது இங்கு நிறையபேர்களுக்குத் தெரியும்” ..”எனது ஆசையெல்லாம் தியேட்டரில் படம் ரிலீஸ் பண்ணவேண்டும் என்பது தான். ஆனால் மாற்றம் என்பது எதார்த்தமானது. அதை நாம் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்”
ராட்சசன் என்ற மிகப்பெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்த பிறகும் எனக்கு 9 படங்கள் ட்ராப் ஆனது. எனக்கு அது பெரிய மனவலியைக் கொடுத்தது..ஆனால் இப்போது அதில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்..இப்போது எந்த நெகட்டிவ் விசயங்களையும் பேசவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன்..இனி பாசிட்டிவ் விசயங்களை மட்டும் பேசுவோம்” நன்றி