Tamil Movie Ads News and Videos Portal

ஆசிரியர்களுக்கு மரியாதை! அசத்திய விஜயின் மக்கள் இயக்கம்!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று (27.3.2022) ஞாயிற்றுகிழமை அன்று “தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.