Tamil Movie Ads News and Videos Portal

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்!

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர்.

30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர்  விச்சு விஸ்வநாத் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.  அதனால் தானோ என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

தற்போது இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளேன். அவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 படத்திலும் நடித்துள்ளேன். அரண்மனையின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்த்தை தொடர்ந்து தற்போது அரண்மனை 3 படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சுந்தர்.C அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி அரண்மனை 3 படம் அமைந்துள்ளது.; என்றார்.