Tamil Movie Ads News and Videos Portal

சமூக குரலாக ஒலிக்க தாடி பாலாஜி ஆரம்பித்த ‘ஜல்கோ தாடி பாலாஜி’!

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல் ஏதாவது பிரச்சனை என்றால் குரல் கொடுத்தும் வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையில் ஆரம்பித்து சாத்தான்குளம் பிரச்சனை வரை மக்களுக்கான குரலாக தாடிபாலாஜி ஒலித்துக் கொண்டிருக்கிறார். இவர் பேச்சு அனைவரிடத்திலும் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று தந்துள்ளது.

காவல்துறையின் அராஜக போக்கை எதிர்த்து முதலில் தைரியமாக தன் கருத்தினை பதிவிட்டு காவல் துறையால் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் முதல் ஆளாக அங்கு வந்து நிற்பேன் என்று கூறி அனைவரின் ஆதரவை பெற்றுள்ளார்.

தன் மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தாலும், தன் வாழ்வில் பல இன்னல்கள் வந்தாலும் மக்களுக்கான சமூக பிரச்சனையில் முதல் குரல் தாடி பாலாஜியின் குரலாக தான் இருக்கிறது.

தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் விரைவில் ஒன்றாக சேர்ந்து வாழப்போவதாகவும் ஒரு இனிதான செய்தி வெளிவந்துள்ளது.

சமூக பிரச்சனைகளை பற்றி குரல் கொடுப்பதற்காகவே தனியாக ’ஜல்கோ தாடி பாலாஜி’ என்ற யூ-டியூப் பக்கத்தை துவக்கியுள்ளார். இனி தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், பிரச்சனைகளையும் இதன் மூலமாக மக்களிடையே பேசப்போவதாகவும் தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

https://www.youtube.com/channel/UCKmtmQ4NUBQZncOtr80ZpPg