Tamil Movie Ads News and Videos Portal

முதல்வரின் தாயார் மரணத்திற்கு டி.ஆர் இரங்கல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் தாயார் K.தவசாயி அம்மா வயது (93) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.ஐயா, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களே!நாட்டுக்கே நீங்கள் முதல்வன், ஆனால் உங்கள் தாய்க்கோ தவப்புதல்வன்.

உங்களை பெற்றெடுத்து ஆளாக்கியது தவமிருந்த தவசாயி அம்மா!உங்களை தத்தெடுத்து தமிழக முதல்வர் அளவிற்கு உயர்த்தியது புரட்சித்தலைவி அம்மா!இன்று பெற்றத்தாயை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் தங்களது இயக்கத்தை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறி கொள்கிறேன். தங்கள் தாயாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.