Tamil Movie Ads News and Videos Portal

மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி!

மூன்றாவது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட புகழ், RDM, சுரேஷ் ரவி கூட்டணி.
நீண்ட பொதுமுடக்க காலத்தின் பாதிப்புகள், உலகம் முழுக்க அனைத்து துறைகளிலும் எதிரொலித்தாலும், திரைத்துறையை தான் அதிகம் பாதித்தது. ஆனாலும் நல்ல சினிமாக்களை மக்கள் என்றும் கைவிடுவதில்லை. இந்த பொதுமுடக்க காலம் முடிந்து தமிழ்திரையில் வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” அதன் தரமான கருத்தியல்களுக்காக, மிக அற்புதமான உருவாக்கத்திற்காக அனைவராலும் பாராட்டு பெற்றது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த நிலையில் “காவல்துறை உங்கள் நண்பன்” பட RDM, சுரேஷ் ரவி கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளார்கள்.

இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் Preniss International (OPC) Pvt Ltd சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.