நடிகர் செந்தில் ட்விட்டரில் இணைந்துள்ளதாக கடந்த இரு நாட்களாகச் செய்தி றெக்கைக் கட்டிப் பறந்தன. சமூகவலைத்தில் வலம் வந்த இந்தச் செய்திக்கும் செந்திலுக்கும் துளியும் சம்பந்தமில்லையாம்.
இது குறித்து நடிகர் செந்திலிடம் பத்திரிகையாளர்கள் விசாரித்த போது, “எனக்குத் தெரிஞ்சது பத்திரிகை ஊடகம் மற்றும் டிவி ஊடகமும் தான். வேறு எந்த ஊடகத்திலும் நான் இல்லை. எனக்கு அது தெரியவும் செய்யாது. தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.