Tamil Movie Ads News and Videos Portal

கருப்பர் கூட்டம் பற்றி சரத்குமார் பரபரப்பு கருத்து

- Advertisement -

தற்பொழுது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக இந்த 2020ம் ஆண்டை நாம் கடுமையாகப் போராடி கடக்கவேண்டும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் ஆனால் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது ஆங்கில மருத்துவத்திற்கு நாம் எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறமோ அதே போல் சித்த மருத்துவத்திற்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வைத்தியங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வைத்தியமாகும்.

ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருப்பது என்பது சாதாரண காரியங்கள் இல்லை ஆனால் நாம் அனைவரும் வீட்டில் விழிப்புடன் இருப்பது தான் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். அதேபோல் பல்வேறு பிரச்சினைகள் அதாவது மன உளைச்சல்கள் பொருளாதார சிக்கல்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். மேலும் கொரோனாவிற்க்கு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது கூடிய விரைவில் வெற்றி அடைந்து விரைவில் நாம் மீள வேண்டும்

கருப்பர் கூட்டம் தொடர்பாக நான் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன் தற்போதும் நான் கூறுகிறேன். அது என்னவென்றால் இதுபோன்ற சம்பவங்களை வெளியிடும் சமூக வலைத்தளங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் யாராக இருந்தாலும் மற்ற மதத்தினரையும் அவர்களை சார்ந்தவர்களும் துன்புறுத்தக்கூடாது அப்படி மீறும் பட்சத்தில் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்றார்

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.