’டிமாண்டி காலனி’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகியப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் படத்திற்கு “கோப்ரா” என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ‘அங்கமளிஸ் டைரீஸ்’ புகழ் நடிகர் ஷோனு நிகம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரம் அவர் தயாரிப்பாளர் தரப்புடன் சில விவகாரங்களில் மோதல் போக்கில் ஈடுபட்டதால், அவர் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படி அவர் படத்தில் நடிக்கவேண்டுமென்றால் ரூபாய் 1 கோடி செலுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் தயங்குகின்றனர். எனவே ‘கோப்ரா’ படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்குப் பதிலாக மற்றொரு மலையாள நடிகரான சர்ஜுனோ காலித் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.