இன்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லியே தமிழர்களின் பொழுதுகள் விடிந்தன. ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழர்களுக்கு மிகவும் விசேசமான நாளாக இருக்கும். இந்தமுறை கொரோனா செய்த கொடுமையால் யாரும் புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலை. மேலும் இன்றைக்கு அம்பேத்கர் பிறந்தநாளும் கூட.
பிரதமர் மோடி முதற்கொண்டு பலரும் அம்பேத்கர் பிறந்த தினத்தையும் அம்பேத்கர் வாழ்க்கைப் போராட்டங்களையும் நினைவுப் படுத்தி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் போட்டிருந்த ட்வீட் கூட அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வெறும் வாழ்த்துகளை மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொண்டார். நம் பாரத தேசத்தில் மானுட விடுதலைக்காகப் போராடிய ஒரு மகத்தான தலைவரை ரஜினி போன்ற பிரபலம் நினைவு கூற வேண்டாமா?