Tamil Movie Ads News and Videos Portal

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்


நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாள் அன்று
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அது வருமாறு..

“நண்பர்களுக்கு வணக்கம் ..என் தம்பியின் பிறந்தநாள் அன்று ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.
தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதரவையும் எனது தம்பிக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்”
நன்றி.