Tamil Movie Ads News and Videos Portal

தேசம் மெச்சிய படத்திற்கு பாசமான நன்றி


மொத்த தேசமும் தென்னிந்திய சினிமாவை திரும்பிப் பார்த்த நிகழ்வு பாகுபலி படத்தால் நிகழ்ந்தது. முதல்பாகம் ஏற்படுத்திய தாக்கம் இரண்டாம் பாகத்தை வசூல் ரீதியாக மிகப்பெரிய உயரத்தில் வைத்தது. பாகுபலி 2 படம் வெளியாகி இன்றோடு இரண்டு வருடம் முடிவடைகிறது. அதுகுறித்து நடிகர் பிரபாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘பாகுபலி 2’ நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.
-பிரபாஸ்