ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலத்திடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரிதார். அதோடு மட்டுமின்றி
இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். “நடிகர் பொன்னம்பலம் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்”. என்பதே அவரின் நலம் விரும்பிகளின் பிரார்த்தனையாக இருக்கிறது