அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.’ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக இணைந்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என தெரிய வருகிறது.
இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் அவருடைய முதல் படத்திற்கு பிறகு மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மேலும் இருவரும் இணைந்த ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்தின் வெற்றியை, இப்படம் மீண்டும் சாத்தியப்படுத்தும் என திரையுலகம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய வேறு எந்த தகவலும் கூடுதலாக வெளியாகவில்லை.
‘2018’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மசாலா படைப்பை வழங்கி வெற்றி பெறுவதற்காக இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் திட்டமிட்டார். இதற்கான அறிவிப்பையும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அது கைவிடப்பட்டது. ‘2018’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் நிவின் பாலி இணைந்து மலையாள திரையுலகிற்கு மாபெரும் வெற்றி படத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.