கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “விக்ரம்” இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் நரேன். இப்படம் குறித்து நடிகர் நரேன் கூறுகையில் ” இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம் முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை! ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.