அரசியல் வரலாற்றில் நேர்மையின் மறு வடிவமாக அரிதாக வாழ்ந்து முடித்தவர் கக்கன். காமராஜரின் அக நெருக்கத்திற்குரியவர். இன்றைய அரசியல் வாதிகள் அவரை நினைவுகூற மறுப்பதற்கு உளவியல் காரணம் உண்டு. சமீபத்தில் மன்சூர் அலிகான் கக்கன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அது வருமாறு..
“ஒரே நேரத்தில் பத்து துறைக்கு அமைச்சராய் இருந்தும் பதவி முடிந்ததும் வரிசையில் நின்று பேருந்தில் பயனித்த மாற்றுவேஷ்டி கூட இல்லாத மாமனிதன் இந்த மனிதருள் மாணிக்கத்தைப் போன்ற அமைச்சர்கள் நம் நாட்டை ஆள வேண்டும் என்றnல் நாம் தமிழர் ஆட்சியால் மட்டுமே முடியும்!!!
அய்யாவின் புகழ் பரப்புவோம் மாத்தமிழன் கடமை வீரர் காமராஜரின் நண்பர் கக்கன் புகழ்
போற்றி!! போற்றி!!!”