Tamil Movie Ads News and Videos Portal

நடிகர் கார்த்தியின் நெத்திப்பொட்டு கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள EIA சட்டத்தை விமர்சித்து நடிகர் கார்த்திக் வெளியிட்ட அறிக்கை…!!!

“மத்திய அரசு கொண்டு வந்துள்ள EIA சட்டம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்!

சுற்றுச்சூழலை குறித்து நாம் பேசவே கூடாது எனும் இச்சட்டம் எவ்வாறு ஒரு நல்ல சட்டமாக இருக்கமுடியும்?

சட்டத்தின் வரைவறிக்கையை ஏன் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் வெளியிடவேண்டும்? தாய்மொழி தமிழை மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இதைகுறித்து தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஏற்கனவே கொரோனா எனும் அரக்கப் பிடியில் இருந்து மக்கள் மீளமுடியாத இந்த வேளையில், இச்சட்டத்தை ஏன் இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதகங்களை மக்களிடம் கொண்டுசென்று பொது விவாதமாக்க வேண்டும். நமக்கு கிடைத்திருக்கும் இந்த கடைசி வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அறிஞர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை இச்சட்டத்தின் கொண்டுவர வேண்டும் என மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்”.

நடிகர்_கார்த்திக்