கொரொனா காலத்தில் மாணவர்களுக்குப் பயன்படும் செயலைச் செய்து வருகிறார் நடிகர் ஜெகதீஸ். இவர், ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். திரைக்கு வர காத்திருக்கும் ஜானகி விஸ்வனாதன் இயக்கதில் “திரை கடல்” படத்திலும் நடித்திருக்கிறார. மேலும்
அனிருத் வெளியிட்ட “காதல் நீயே” ஆல்பத்தில் நடித்தும், பாடல் எழுதியுமிருந்தார். இயக்குநர் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராகவும் திரைத்துரையில் கோலோச்சி வருகிறார்.
இவர் ஒரு விமானவியல் முதுநிலை பட்டதாரி. தற்போது ஐஐடி கீழ் இயங்க்கும் “இங்குபேசன் செல்” உதவியுடன்
வாயு-சாஸ்த்திரா என்ற நிறுவனத்தின் மூலம் நாடகக் கலைஞர்களுக்கு விமானவியல் கற்பித்து வருகிறார். இது முழு நேர
நாடக கலைஞர்களுக்கு ஒரு பகுதி நேர வேலை வாய்ப்பாக இருக்கும். 15 க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களுக்கு உதவும் நிறுவனமாகவும் இது வளர்ந்து வருகிறது.
இந்த ஊரடங்கு சமயத்தில், ஐஐடி இங்குபேசன் செல் – வழிகாட்டுதலின் மூலம் ,300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள்
கற்பித்து கொண்டிருக்கிறார்