‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அவர் நடிக்கும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஹிப் ஹாப் தமிழா – கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#HiphopTamizha