Tamil Movie Ads News and Videos Portal

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்!

நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக இலவச மதிய உணவு மக்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, பூரி ஆகியவை சுமார் 600 பேருக்கு வழங்கப்பட்டது.மேலும் மதிய உணவாக 1500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்திந்திய தலைமை மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா உடன் இருந்து துவங்கி வைத்தார்.பொதுமக்கள் ஏராளமானோர் மனதார தனுசை நெகிழ்ந்து வாழ்த்தி உள்ளனர்.