Tamil Movie Ads News and Videos Portal

முதல்வருக்கு நன்றி சொன்ன டி.ஆர்

திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி,திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி,திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி.திரையரங்குகளை நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன இயங்க அனுமதி வழங்கி திரைத்துரையினரின் வாழ்வில் ஓளி வீச வழி வகுத்து தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும், ஏனைய அனைத்து தமிழக அமைச்சர்களுக்கும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்