நடிகர் அஜித்குமார் முகநூல் பக்கம் துவங்கி இருப்பதாக நேற்று அவரது கையெழுத்தோடு ஒரு கடிதம் இணையத்தில் வலம் வந்தது. தற்போது அது போலிக்கடிதம் என்பதை அஜித்தின் வக்கீல்கள் உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
“நடிகர் ஸ்ரீ.அஜித் குமார் அவர்களின் சட்ட ஆலலோசகர்கள் நாங்கள் (இனிமேல் அவர்
எங்கள் கட்சிக்காரராக கருதப்படுகிறார்). மேலும் இந்த நோட்டீஸை அவரது
அறிவுறுத்தலின் பேரிலும் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம்.
மார்ச் 6, 2020 அன்று அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில்
பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர
முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்தக்கடிதம் அஜித்குமார்அவர்களா வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்.
அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.
அஜித்குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்ஸப வெளியிட்டுள்ளார், அதில் தனக்கு
எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடகங்களின்
எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண் டிருக்கவில்லை
ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் கீழ்கண் டவற்றை மீண் டும் வலியுறுத்த விரும்புகிறார்.
a) அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.
b) அவர்எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை
.
c) சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர்
பக்கத்தையும் குழுவையும் அவர்ஆதரிக்கவில்லை
d) மீண் டும் சமூக ஊடகங்களில் வரப்போவதாகக் கூறி வந்த இந்த போலிக்
கடிதத்தை அவர் வெளியிடவில்லை .
இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின்
கையொப்பத்தை வைத்து மோசடி செய்த குற்றவாளியைக் கண் டு பிடிப்பதற்குத் தேவையான
சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்
குறிப்பிட விரும்புகிறார்”.