Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி,இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி .சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற The Revenant, The Raid படத்தொடர் எல்லாம் இம்மாதிரி ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சிகளுக்காக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இம்மாதிரியான முயற்சிகள் தீவிரமாக நிகழ்ந்ததில்லை. முதல் முறையாக Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது.