ஆக்ஷன் சங்கத்தமிழன் யாருக்கு அதிக நெகட்டிவ்?
சென்றவாரம் வெளியான படங்களான ஆக்ஷன் சங்கத்தமிழன் இரண்டு படங்களுக்கும் ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு படங்களும் தவறிவிட்டன என்றே சொல்கிறது கோலிவுட் வட்டாரம். பக்கா மாஸ் என சொல்லப்பட்ட சங்கத்தமிழன் படம் தயாரிப்பாளர் VS விநியோகஸ்தர்கள் சம்பந்தப்பட்ட பணப்பிரச்சனையால் வெள்ளிக்கிழமை வெளியாகவில்லை..மறுநாள் தான் வெளியானது. விஷால் சுந்தர் சி கூட்டணியின் ஆக்ஷன் படம் திட்டமிட்டபடியே வெள்ளிக்கிழமை வெளியானது. பெரிய ஓப்பனிங் எதுவும் இல்லாத இப்படம் மிகச்சுமாரான படம் என்ற விமர்சனங்களைத் தான் பெற்றது. அதனால் சங்கத்தமிழன் படம் தப்பித்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் சங்கத்தமிழன் படத்திற்கும் நிறைய நெகட்டிவ் ரிவியூஸ். அதனால் அப்படமும் போதிய வரவேற்பைப் பெறாமல் தவிக்கிறது. ஆக சென்றவாரம் வெளியான இரண்டு பெரிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் சிறிய தாக்கத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என்பது தான் பெருஞ்சோகம்