‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பிரசன்னா அப்படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘அஞ்சாதே’ படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்ததில் இருந்து அவருக்கு பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு வருகிறது. தற்போது நரேன் கார்த்திக் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் “மாபியா” படத்திலும் பிரசன்னா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “இரண்டுக்கு மேற்பட்ட நடிகர்கள் சேர்ந்து நடிப்பது என்பது ஆரோக்கியமானது. ஏனெனில் ரசிகர்களிடம் இது போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில் நடிப்பதால் என்னுடைய இமேஜ் பாதிக்கும் என்று நினைக்கவில்லை. இதனால் என் இமேஜ் மக்களிடம் அதிகமாகத்தான் செய்கிறது. எதிர்காலத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது” என்று கூறினார்.