சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்
இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும். டிக்டாக் மற்றும் பப்ஜி ஆப் – களை புறக்கணிக்க வேண்டும். சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி விட்டு இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.