ஊரே ஊரடங்கால் அவதிப்பட்டிருக்கும் வேளையில் டிவி சீரியல் நமக்கு இப்ப ரொம்ப முக்கியமா? என்று அப்பாவித் தமிழன் கேட்டாலும் நிறைய இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்புகளில் டிவி சீரியலும் இருக்கிறது என்பது தான் நிஜம். அது சம்பந்தமாக நடிகை குஷ்பூ ஆடியோவைப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் “சேனல்ஸ் எல்லாம் டிவி சீரியல் ஷுட்டிங்கை ஆரம்பிக்கச் சொல்றாங்க. நானும் மினிஸ்டரிடம் பேசியுள்ளேன் அவர் 25-ஆம் தேதிக்கு மேல் சொல்கிறோம் என்பதாக கூறி இருக்கிறார். நாம் பழையபடி ஷுட்டிங் சென்றாலும் உச்சக்கட்ட பாதுகாப்போடு தான் செல்ல வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் நடிகை ராதிகா குஷ்பூ ஆடியோ வெளியிட்ட சிறிது நேரத்திலே அவரும் ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் அவர், “சீரியல் ஷுட்டிங் ஆரம்பியுங்கள் என்று எந்தச் சேனல்ஸும் சொல்லல. ஸ்கிரிப்ட் எல்லாம் தயார் படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லியுள்ளார்கள்” என்று குஷ்பூ கருத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.