Tamil Movie Ads News and Videos Portal

விடுங்க ஜோ! நீங்க ஜோராப் பேசிருக்கீங்க!

- Advertisement -


எதைப் பேசணுமோ அதை யாராவது பேசிட்டா பொறுக்காது நம் அரசியல் உலக்கைகளுக்கு. நடிகை ஜோதிகா கல்விக்கூடங்களின் தரத்தை மேம்படுத்துவது குறித்திப் பேசியதை அப்படியேத் திரித்துக் கொள்கிறது ஒரு கூட்டம். இதோ அவர் பேசியது,

“படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் போயிருந்தபோது பிரகதீஸ்வரர் கோயிலை பார்க்காமல் போயிராதீங்க. அவ்வளவு அழகா இருக்கும். போய்_பாருங்க என்று சொன்னார்கள். ஏற்கனவே பார்த்திருக்கேன். ரொம்ப சிம்ப்பிளா, கியூட்டா… உதய்ப்பூர் பேலஸ் போல இருக்கும்.

மறுநாள் எனக்கு அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது.. அங்கே நான் பார்த்ததையெல்லாம் வாயால் சொல்ல முடியாது.. அவ்வளவு மோசமான பராமரிப்பு. அன்று நான் மருத்துவமனையை பார்த்துவிட்டு நான் கோவிலுக்கு செல்லவில்லை.

கோவில்களை பராமரிக்க, பெயிண்ட் அடிக்க லட்சக்கணக்கில் செலவு பண்றீங்க. கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க.

என்னுடைய வேண்டுகோள். அதே அளவு பணத்தை அரசு பள்ளிக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்பது மட்டுமே. பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் அவ்வளவு முக்கியம்…’’

இதில் என்னய்யா குறை கண்டீங்க. ஜோரா பேசிருக்காப்ல!

- Advertisement -