கோலிவுட் வட்டாரத்தில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் காதல் ஜோடி என்றால் அது நயன் விக்னேஷ் சிவன் தான். கடந்த நான்கு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காதல் எப்பொழுது கல்யாணத்தில் முடியும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க அவ்வபோது அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்களும் வரத் தவறுவது
இல்லை. அது போன்ற வதந்திகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து வரும் நிலையில், தற்போது இயக்குநர் கோபி நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலை அடிப்படையாக வைத்து, ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த தகவலை உறுதிபடுத்தியிருக்கும் இயக்குநர் அட்டகத்தி தினேஷ் தீப்தி திவேஸ் இருவரும் இப்படத்தில் நாயகன் நாயகியாக நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், செல்வேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்றார்.