Tamil Movie Ads News and Videos Portal

அதிரடியில் விஜய்- உடன் இணையும் மாளவிகா மோகனன்

தற்போது தளபதி விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் இதற்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் சசிக்குமார் ஜோடியாக நடித்திருந்தார். கவர்ச்சியான ஆடைகள் அணிந்து அவ்வபோது சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு

கவனம் ஈர்க்கும் மாளவிகா தற்போது தற்காப்பு கலையை கற்று வருகிறாராம். இது ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெறவிருக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்காக எடுக்கும் பிரத்யேகப் பயிற்சியாம். கிடைத்த தகவல்களின் படி மாளவிகா இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து விஜய் சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றனவாம்.