‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை இயக்கவிருக்கிறார். எப்படி அசுரன் படத்தின் கதையை “வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுத்தாரோ..? அதே போல் தற்போது சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் கதையை நாவலில் இருந்தே எடுக்கவிருக்கிறார். மறைந்த தமிழின் முக்கிய எழுத்தாளர் “சி.சு.செல்லப்பா” எழுதிய
வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்கவிருக்கிறார் வெற்றிமாறன். தன் அப்பாவைக் கொன்ற காளையை அடக்க ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வரும் இளைஞனுக்கும், அவன் ஊரின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஒற்றை ஆளாக வந்து நிற்கும் வயோதிக மனிதனுக்கும் இடையே ஏற்படும் பந்தமும் பாசமும், வீரமும் கலந்த கதை வாடிவாசல். அப்படைப்பும் வெற்றிமாறன் கை வண்ணத்தில் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியப் படைப்பாக மிளிரும் என்று நம்பலாம்.