Noise and Grains’ என்ற நிறுவனம் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சியை நாடெங்கும் எடுத்துச் செல்ல இருக்கிறது..கடல் படம் மூலமாக பல லட்சம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடகர் சித்ஸ்ரீராம். அவரின் இசைப் பயணத்தில் இன்னொரு மைல் கல்லாக தற்போது வேறொரு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிறுவனம் ஆல்ரெடி ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்திழுத்து வைத்துள்ளது.
தற்போது சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்க இருப்பதால் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகளை வாங்க ரசிகர்கள் ஆன்லைனில் திரளத்துவங்கி விட்டனர்
அனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.