தமிழ் திரையுலகில் இரு பெரும் இசை ஆளுமைகளாக இருப்பவர்கள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் திரையுலகிற்கு “ரோஜா” திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அவரை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தப் பெருமை இயக்குநர் மணிரத்னத்தைச் சேரும். அவரை அறிமுகப்படுத்திய மணிரத்னம் இன்று வரை அவரது அனைத்துப் படங்களிலும் ரஹ்மானுடன் தான் இணைந்து பணியாற்று வருகிறார். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி வரும்
“பொன்னியின் செல்வன்” படத்திலும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தான் பணியாற்றுகிறார். மணிரத்னத்துடன் தொடர்ந்து பயணப்படுவது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ஆர், “மணிரத்னத்துடன் பணியாற்றுவது என்பது மிகவும் சவாலானது. இப்பொழுதும் நான் இசைக்கும் டியூன்கள் அவருக்குப் பிடிக்குமா..? என்ற கேள்வியும் பயமும் இருந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ஒரு பாடலுக்கு 15 டியூன்கள் வரைப் போட்டிருக்கிறேன்..” என்று தனது அனுபவத்தைக் கூறியிருக்கிறார்.