Tamil Movie Ads News and Videos Portal

“கணவன் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது பெரிய ஸ்ட்ரென்த்”-அமலாபால்

“அதோ அந்தபறவை போல” என்ற டைட்டிலுக்கும் நடிகை அமலாபாலுக்கும் பெரிய பந்தம் உண்டு. மைனா என்ற பறவை பெயர் கொண்ட படம் மூலமாகத் தான் அவர் கெத்தாக தமிழ்சினிமாவில் களம் இறங்கினார். இன்று அதோ அந்த நடிகை போல நடிக்க வேண்டும் என்ற பிற நடிகைகள் சொல்லும் அளவிற்கு அம்மா கணக்கு, ஆடை ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அதோ அந்த பறவை போல படமும் அவருக்கு அப்படி அமையும் என்கிறார்கள். இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமலாபால்,

” அஸ்பெண்ட் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது பெரிய ஸ்ட்ரென்த் அருண் அம்மா அப்படி அவரை வளர்த்துள்ளார். வினோத் அவர்களின் அம்மாவும் அப்படி கஷ்டப்பட்டு வந்தவர். என் அம்மாவும் நிறைய சிரமங்களை சந்தித்தவர். இப்படி எங்க டீமில் எல்லாரும் பெண்களை பலத்தை உணர்ந்தவர்கள். இந்தப்படம் ஒரு நல்ல கதை நிச்சயமாக லாபமும் கொடுக்கும்” என்றார்.