புண்ணுன்னு சொல்லுமுன்னே வெந்துட்டுனு சொல்ற உலகம் நம் சினிமா உலகம்..அப்படித்தான் சமீபத்தில் சோனா விவகாரத்தையும் ஊதிப் பெரிதாக்கி விட்டன சில மீடியாக்கள்..மலையாளத்தில் அவர் நடித்துள்ள பச்சமாங்கா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை சோனா கவர்ச்சியாக தோன்றியது போல் சில காட்சிகள் இருந்தன. இதை வைத்து சோனா தான் அடுத்த ஷகிலா என்று பலர் கொளுத்திப் போட அதிர்ச்சியாகி விட்டார் சோனா. ஏன்னா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “இனி நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார். இந்தப்படம் எடுத்து இரண்டரை வருடங்களுக்கு மேல் இருக்குமாம்..பாவத்த..இதுகுறித்து சோனா கூறி இருக்கும் விசயம் என்னவென்றால்,
“பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்” என்றார்