வனமகள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பின்னர் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்தவர் நடிகை சாயிஷா ஷேகல். இவர் திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சூர்யா ஜோடியாக இவர் நடித்த காப்பான் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மிகச் சிறந்த நடிகையான சாயிஷா தற்போது
‘மாரி 2” படத்தின் ஹிட் பாடலான ரவுடி பேபி பாடலுக்கு நடன மாஸ்டர் ஸ்ரீதருடன் இணைந்து ஆடல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருக்கிறார். ஒரு நிமிடம் 33 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வீடியோவில் மீண்டும் நடனப் பயிற்சியைத் தொடங்கிய போது என்றும் குறிப்பிட்டுள்ளார் சாயிஷா ஷேகல்.