எது எப்படியோ தமிழ் சினிமா முன்பு போல் இல்லை என்பதை இந்த ஒற்றை விசயத்தில் அழுத்தம் திருத்தமாக சொல்லமுடியும். அது கல்யாணம் ஆகிவிட்டால், ஹீரோயின்களின் கதை முடிந்தது என்பது தான். முன்பெல்லாம் ஒரு ஹீரோயின்னுக்கு கல்யாணம் ஆகிவிட்டாலே அவ்வளவுதான்; அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் கிடைக்காது;
முன்னணி நாயகர்களும் அவரோடு ஜோடி சேரத் தயங்குவார்கள். ரசிகர்களும் இது போன்ற ஹீரோயின்களை பெரிதாக ரசிக்க மாட்டார்கள். தற்போது அந்தச் சூழல் மெல்ல மாறி வருகிறது. இதன் ஆரம்பம் பாலிவுட்டில் தான்.திருமணம் செய்த பின்னரும் ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா போன்றோர் இன்னும் நிலைத்து நிற்கார்கள். அந்த வரிசையில் அதே நீளத்திற்கு இன்னும் தமிழ் சினிமா நாயகிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றாலும் கூட,
சமந்தா, சாந்தினி போன்ற சில நடிகைகளாவது இந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பது சாதனை தான். இது ஆறுதலான விசயமாக இருப்பினும் சமந்தாவின் சில அதிரடிகள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்து வருகின்றன. குறிப்பாய் அவரது ஆடை தொடர்பான அதிரடிகள். தற்போது தொடர்ச்சியாக இரு படவிழாக்களில் அவரின் உடை படுகவர்ச்சியாக அமைய, அதைப் பார்த்த பல ரசிகர்கள் இன்னுமிப்படி கவர்ச்சி காட்ட வேண்டுமா..? என்று முகம் சுளிக்க; இன்னும் சிலரோ இன்னும் அவரின் கட்டழகு குறையவே இல்லை என்று வாயைப் பிளக்கிறார்கள்.