Tamil Movie Ads News and Videos Portal

”இயக்குநர் கொடுத்த ஊக்கம் என்னை எழ வைத்தது” – மஞ்சிமா மோகன்

’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ’தள்ளிப் போகாதே” பாடலின் மூலம் பல கோடி இரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சிமா மோகன். அப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் வந்த போதும், எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர்

ஒரு விபத்தில் சிக்கிய மஞ்சிமாமோகன் இனி படங்களில் நடிக்க முடியாது என்றத் தகவல் பரவியது. அதைப் பொய்யாக்கும் விதமாக எப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணுவிஷால் ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் மஞ்சிமா மோகன் “எப்.ஐ.ஆர்’ படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் கொடுத்த உற்சாகமும் ஊக்கமும் என்னை மீண்டும் எழுந்து நடமாடச் செய்தது. இனி நான் நினைத்ததைச் சாதிப்பேன்” என்று கூறியுள்ளார்.