மலையாளத்தில் 2015ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் “சார்லி”. மார்டின் பறக்கத் இயக்கிய இப்படத்தில் டெஷா என்ற கதாபாத்திரத்தில் பார்வதியும் கலக்கி இருந்தார். பல விருதுகளைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. குறும்படங்களை இயக்கிய அனுபவமுள்ள திலீப் குமார்
இயக்குகிறார். பார்வதி நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். எல்லா விசயங்களையும் பாசிட்டிவாக அணுகும் ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் துல்கர் கலக்கி இருந்தார். அந்த வேடத்தில் மாதவன் இப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.