‘கைதி’ படத்தின் வெற்றி கார்த்தி நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகரித்துள்ளது. ‘கைதி’ படத்திற்குப் பின்னர் ‘பாபநாசம்’ புகழ் ஜுத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் “சுல்தான்” திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ்
கண்ணன் இயக்கத்தில் இப்படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் முதன் முதலாக நடிக்கும் தமிழ்ப்படம் இதுவென்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகவிருக்கிறது.