Tamil Movie Ads News and Videos Portal

தனுஷ் இயக்கத்தில் இருந்து ஒதுங்குவது ஏன்..?

நடிகராகவும் பாடகராகவும் தன் திறமையினை நிருபித்த தனுஷ், 2018ம் ஆண்டு ‘பில்லா பாண்டி’ என்கின்ற படத்தையும் இயக்கினார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி பகுதியை களமாகக் கொண்டு, ஒரு வரலாற்றுப் படத்தை இயக்கவிருப்பதாகவும், அதில் நாகர்ஜூன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அப்படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.

பின்னர் தனுஷ், பட்டாஸ், அசுரன் போன்ற படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். தற்போது மீண்டும் தான் நடிக்கவிருக்கும் படத்திற்கு கதை, வசனத்தை தனுஷ் எழுதவிருக்கிறார். இப்படத்தை இரும்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கவிருக்கிறார். கதை, வசனத்தை எழுதும் தனுஷ் இயக்கத்தில் இருந்து ஒதுங்கியிருப்பது ஏன்..? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.