தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என்ற இரு பெரும் துருவங்களுக்கு அடுத்ததாக அசைக்க முடியாத இரு பெரும் சக்தியாக மாறி வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜீத் தான். இதில் அஜீத் சற்றே வித்தியாசமானவர். தான் நடிக்கும் படங்கள் தொடர்பான எந்தவொரு புரொமோஷன் நிகழ்வுகளிலும் பங்கேற்பது இல்லை. அது போல் தன் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். இருப்பினும் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இது தவிர்த்து அஜீத்திடம்
இருக்கும் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பைக் ரேஸ் மற்றும் குட்டி ஆளில்லா விமானம் தொடர்பான தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அதீத ஆர்வம் உள்ளவர். இவர் ஏற்கனவே அண்ணாப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளித்திருந்தார். அதுபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கும் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளித்து உதவியிருக்கிறார். மேலும் தற்போது ‘வலிமை’ படத்தில் போலீஷ் அதிகாரியாக நடிப்பதால், பிற போலீஷ் அதிகாரிகளிடம் இருந்து எப்படி போலீஷ் அதிகாரியாக நடிப்பது என்பது தொடர்பான டிப்ஸ்களை பெற்றிருக்கிறார் தல ‘அஜீத்’.