Tamil Movie Ads News and Videos Portal

அதர்வாவின் வித்தியாச ஆட்டம்

தொடர்ந்து இடைவிடாமல் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அதர்வா முரளி. MKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் R கண்ணன் தாயாரித்து இயக்கும் இன்னும் தலைப்பிடாத “Production no 3” படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புறம் அவர் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” படத்தை முடிக்கும் தருவாயில் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில்

வெளியாகியிருக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. வழக்கமாக ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால் “குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வா முரளி குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினியை முதுகில் சுமந்து நிற்கிறார். வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.