பரவை முனியம்மாவுக்கு தீபாவளி பரிசு-உதவித்தொகை வழங்கிய அபிசரவணன்!
தூள் படத்தில் ‘சிங்கம்போல நடந்து வர்றான் செல்ல பேராண்டி’ என பாடி நடித்து புகழ் பெற்றவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா.. தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் அவரை ‘பட்டதாரி’ புகழ் நடிகர் அபிசரவணன் நேற்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.. மேலும் அவருக்கு தீபாவளி புது துணிமணிகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கிய அபிசரவணன், அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் வாங்கிக்கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் அவரிடம் வழங்கியுள்ளார்..
தீபாவளிக்கு முன்பே பரவை முனியம்மாவை சந்திப்பதற்காக மதுரைக்கு கிளம்பிய அபிசரவணன், திருச்சி அருகே குழந்தை சுஜித் வில்சன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் பதறிப்போய் திருச்சிக்கு கிளம்பிவிட்டார். சிறுவனை மீட்கும் வரை அங்கேயே இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்துள்ளார். சிறுவனின் நல்லடக்கத்தை முடித்த பின்னர் உடனடியாக மதுரைக்கு கிளம்பி வந்து பரவை முனியம்மாவை சந்தித்துள்ளார்.
நடிகர் அபி சரவவனை பொறுத்தவரை மழை, வெள்ள பதிப்பு, புயல் பாதிப்பு என இந்தியாவில் எங்கே பேரிடர் ஏற்பட்டாலும் அங்கே முதல் ஆளாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபவதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும் சளைத்ததவர் அல்ல.