விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படங்களில் ’பெல்லி சுப்புலு’ படமும் ஒன்று. இப்படத்தில் நாயகியாக ரீது வர்மா நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு, சிறந்த நடிகைக்கான தெலுங்கின் நந்தி விருதையும் ரீது வர்மாவிற்குப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றி அவரை தமிழ் சினிமாவிற்கும் அழைத்து வந்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ரீது.
ஆனால் படம் வெளியாகாமல் ஓராண்டிற்கும் மேலாக கிடப்பில் கிடப்பதால் அஃப்செட்டில் இருந்தார் ரீது ஆனால் அவரின் கவலையை தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றி போக்கி இருக்கிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இனி தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் ரீது வர்மா.