புதையலை பங்கு வைக்கும் போது நடக்கும் சிக்கலும் பிடுங்கலுமே.ஆயிரம் பொற்காசுகள்
வேலைக்குப் போவதில்லை என்பதையே வேலையாக கொண்டவர் சரவணன். அதே போல் ஒருவரான விதார்த்தும் அவரிடம் வந்து சேர்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் அது. அந்தக் கிராமத்தில் வீட்டுக்கு வீடு டாய்லெட் கட்ட அரசு ஆர்டர் போடுகிறது. அதற்காக 12000 ரூபாய் பணமும் அரசு கொடுக்கிறது. சரவணன் டாய்லெட் கட்டாமலே பஞ்சாயத்தை ஏமாற்றி பணத்தைப் பெற, பிரச்சனை பெரிதாகிறது. “இனி கக்கூஸ் கட்டலன்னா நம்மள கட்டிருவாங்க” என்பதை உணர்ந்த சரவணனும் விதார்த்தும் டாய்லெட் கட்டுவதற்காக ஆள்வைத்து வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டுகிறார்கள். அந்தக் குழிக்குள் கிடைக்கிறது புதையல்…அதான் ஆயிரம் பொற்காசுகள். அதை சரவணனும் விதார்த்தும் எப்படி பங்கு வைத்தார்கள்? பங்குக்கு வேறு யாரெல்லாம் வந்தார்கள்? என்பதே படத்தின் மிச்சமுள்ள கதை
எதுனா நல்ல கேரக்டர் கொடுங்கடா..? என கோடம்பாக்கத்தை கொலைவெறியோடு சுற்றிவரும் விதார்த் இந்தப்படத்திலும் தன் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். சரவணன் வெகுநாட்களுக்குப் பின் காமெடியில் சரவெடி கொளுத்துகிறார். இவர்கள் போக படத்தில் வந்துபோகும் அனைவருமே அசத்துகிறார்கள்
ஜோஹனின் பின்னணி இசை பாடல்கள் இரண்டும் இந்தப்படத்திற்கு போதுமான அளவில் அமைந்துள்ளது. பானு முருகனின் ஒளிப்பதிவில் தஞ்சாவூரின் நிலப்பரப்பு கண்முன் விரிகிறது
சிறப்பான ஒன்லைனும், ஆங்காங்கே வெடிக்கும் funலைன்களும் படத்தின் பலம். ஆனால் நல்ல திரைக்கதையும், நேர்த்தியான கதாப்பாத்திர வார்ப்பும் படத்தில் சரியாக அமைக்கப்பட வில்லை. ஹீரோயின் கேரக்டர் வடிவம் எல்லாம் சிறுபிள்ளைத்தன கற்பனை. காதல் காட்சிகளில் உள்ள கற்பனா வறட்சியை சரி செய்து, சின்னச் சின்ன சுவார்ஸ்யங்களை அதிகப்படுத்தியிருந்தால் இந்த ஆயிரம் பொற்காசுகளுக்காக ரசிகன் சில்லறையை சிதறவிட்டிருப்பான். Finally படம் முழுதாக ஏமாற்றவில்லை என்பதால் sure ah தம்ஸப் காட்டலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்