ஆதித்யவர்மா ரிசல்ட் என்ன தெரியுமா?
நேற்று வெளியான ஆதித்யவர்மா படத்தின் ரிசல்ட் கொஞ்சம் கலவையாக வந்திருக்கிறது. இளைஞர்ககுக்கு படம் பிடித்திருந்தாலும் பேமிலி ஆடியன்ஸை படம் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் படத்தின் நீளமும் ஆடியன்ஸுக்கு பெரும் குறையாக தெரிகிறதாம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி துருவ் விக்ரன் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்து படத்தை எனர்ஜிடிக்காக கொண்டு போயுள்ளார் என்கிறார்கள். இப்படம் அவரின் நடிப்புக்கு ஒரு நல்ல தீனி என்றும் சொல்கிறார்கள். ஆக ஆதித்யவர்மா கலெக்ஷனில் கெத்து காட்டாவிட்டாலுன் துருவ் விக்ரமிற்கு இது கெத்து படமாக அமைந்துள்ளது.