Tamil Movie Ads News and Videos Portal

ஆரி அருஜீனாவின் புதியபடம்

புத்தாண்டில் இருந்து தன் பெயரை மாற்றியுள்ளார் நடிகர் ஆரி அருஜீனா. அதன்பின் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பும் வந்துள்ளது. சந்திரா மீடியா விஷன் சார்பாக
எஸ்.எஸ். திருமுருகன் தயாரிப்பில், நெடுஞ்சாலை ஆரி அருஜீனா நடிக்கும் புதுப்படம்..

யோகிபாபு நடிப்பில் வெளியான “பட்டிபுலம்”. படத்தை தயாரித்த சந்திரா மீடியா விஷன் நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களின் நாயகன் ஆரி அருஜீனா நடிப்பில் தனது அடுத்த படத்தை தயாரிக்கிறது.

 

இந்தப்படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த படமாக உருவாக இருக்கிறதாம். ஜீவா சங்கரின் அமரகாவியம், எமன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆல்பர்ட் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியா, சென்னை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. நாசர், செந்தில், யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.