குடிக்கு எதிராக கொடி பிடிக்கும் படம்
ஹீரோவின் அப்பா சின்ன வயதில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் விடுகிறார். இதனால் ஹீரோவின் அம்மா ஈஸ்வரி ராவ் தன் மகனை குடி என்ற வாடையே இல்லாமல் வளர்க்கிறார். கல்லூரி செல்லும் அந்த அன்புத்தாயின் மகன் ஹீரோயின் சாந்தினி மீது காதலில் விழுகிறார். அந்தக் காதல் பிடிக்காத சிலர் ஹீரோவை குடிக்கு அடிமையாக்குகிறார்கள். குடிக்கு அடிமையான ஹீரோவின் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதே கதை
முதல் பாதியில் பெரிதாக கவராத நாயகன் இரண்டாம் பாதியில் நன்றாகவே நடித்துள்ளார். ஒரு கால் இழந்தவராக அவர் வரும் காட்சிகளில் தேறிவிடுகிறார். சாந்தினி அப்பாவி மனைவியாக நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். ஈஸ்வரிராவ் அம்மா கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார்
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தை காப்பாற்றவில்லை. எடிட்டரும் தன்னால் முடிந்தளவிற்கு சொதப்பிள்ளார்
ஒரு தெரு பிரச்சாரத்தை படமாக எடுத்து வைத்துள்ளார்கள். தெரு பிரச்சாரம் என்பதை இழிவாகச் சொல்லவில்லை. எந்தவொரு சம்பவத்தை சினிமாவாக எடுக்கலாம். ஆனால் அது சினிமாவிற்கான இலக்கணத்தோடு இருக்கவேண்டும். அந்த இலக்கணம் இப்படத்தில் துளியுமில்லை. கதை மாந்தர்கள் தங்கள் உணர்வுகளை குவிக்கும் காட்சிகளில் இயல்பு என்பதே இல்லை. குடிக்கு எதிரான படம், ஆனால் குடியை ஊக்குவிக்கும் அரசு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்னாங்க நியாயம்? இப்படி தெளிவற்ற அறமும், தெளிவான தரமும் இல்லாத இந்த
ஆலகாலம் ரசிகனுக்கு போதாதகாலம்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்