Tamil Movie Ads News and Videos Portal

“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

SHREE JAI PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது
“ஆலகாலம்” திரைப்படம்.விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம்.இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஜெயகி, சாந்தினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உட்படப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.